கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நேற்று (17) இரவு இடம்பெற்ற விருந்தின் போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞனின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
போர்ட் சிட்டி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தின் போது இடம்பெற்ற தாக்குதலில் இளைஞன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமை (18) அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
துறைமுக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.