Vijay - Favicon

குடும்ப தகராறில் உயிரிழந்த இளைஞன் – தமிழர் பகுதியில் நடந்த சம்பவம் (படங்கள்)


மன்னார் சாந்திபுரம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) இரவு இடம்பெற்றுள்ளது.



குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,



நீண்டகாலமாக சாந்திபுரம் பகுதியில் இரு குடும்பத்திற்கு இடையில் நிலவி வந்த பிரச்சினை காவல்துறை வரை சென்று சமாதனப்படுத்தபட்டிருந்தது.

சந்தேக நபர்கள் 

குடும்ப தகராறில் உயிரிழந்த இளைஞன் - தமிழர் பகுதியில் நடந்த சம்பவம் (படங்கள்) | Young Man Died In A Family Dispute Incident Mannar

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) இரவு குறித்த இரு குடும்பத்திற்கு இடையில் மீண்டும் பிரச்சனை இடம் பெற்ற நிலையில் முரண்பாடு முற்றியுள்ளது.

இதன்போது பலர் இணைந்து கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய நிலையில் எமில் நகர் பகுதியை சேர்ந்த 34 வயதான சத்தியா என்ற நபர் மரணமடைந்துள்ளார்.


தாக்குதலில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட ஐவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery
Gallery
Gallery
Gallery



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *