சீனாவின் ஆளும் கமியூனிஸ்ட் கட்சியின் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் பாரம்பரியத்தை மீறி, மூன்றாவது தடவையும் ஜி ஜின்பிங் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் மாவோ சேதுங்கிற்கு பின்னர் நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக தனது நிலையை ஜி ஷின்பிங் உறுதிப்படுத்தினார்.
பொதுச் செயலாளர்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவானது, மீண்டும் ஐந்தாண்டு காலத்திற்கு ஜி ஜின்பிங்கை அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்ததாக சீனாவின் அரச ஊடகமான சின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.
பெய்ஜிங்கில் நடைபெற்ற கட்சி விசுவாசிகளின் ஒருவார காங்கிரஸ் கூட்டத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பின் மூலம் ஜி ஷின்பிங் நாட்டின் அதிபராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் நிலையியல் குழுவில் அங்கம் வகித்தவர்கள் பதவி விலகுவதற்கும் கமியூனிட் கட்சியின் மத்திய செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மூன்றாவது முறையாக பொறுப்பேற்பு
அந்த வகையில் ஜி ஜின்பிங் தலைமையிலான ஏழு பேர் கொண்ட புதிய நிலையியல் குழுவின் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
ஜி ஜின்பிங், சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்பது உறுதியாகியுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் அரசாங்கத்தின் வருடாந்த சட்டமன்ற அமர்வுகளின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.