Vijay - Favicon

800 கோடியாக அதிகரித்தது உலகின் மக்கள் தொகை


உலக மக்கள் தொகை 800 கோடியாக அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், 2080 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 1000 கோடியாக அதிகரிக்கலாம் எனவும் ஐநா கணித்திருக்கிறது.


1950 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 200 கோடியாக இருந்தது. அதனுடன் இந்த நிலையை ஒப்பிடும்போது, உலக மக்கள் தொகை 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.

கருவுறுதலில் ஏற்பட்ட சரிவு 

800 கோடியாக அதிகரித்தது உலகின் மக்கள் தொகை | World Population Hits The 8 Billion

கடந்த சில ஆண்டுகளில் கருவுறுதலில் ஏற்பட்ட சரிவு காரணமாக 2050 ஆண்டு அளவில் உலக மக்கள் தொகை 0.5 சதவீதம் வீழ்ச்சியை சந்திக்கும் என ஐநா தெரிவித்திருக்கிறது.



ஆனாலும், 2080 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 1000 கோடி என்ற இலக்கை எட்டும் என ஐநா கணித்திருக்கிறது.

மேலும் அடுத்த 100 கோடி மக்கள் தொகை கொங்கோ, எகிப்து, எத்தியோபியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளில் இருந்துதான் வரப்போகிறது என்றும் ஐநா தெரிவித்துள்ளது.


தற்போதைய நிலையில் இந்திய மக்கள் தொகை 141 கோடியே 20 இலட்சமாகவும், சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் இருப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது. எதிர்வரும் சில ஆண்டுகளில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்தும் எனவும் சொல்லப்படுகிறது.

 ஐ.நா செயலரின் அறிவிப்பு

800 கோடியாக அதிகரித்தது உலகின் மக்கள் தொகை | World Population Hits The 8 Billion

உலக மக்கள்தொகை அதிகரித்திருப்பதை பன்முக தன்மை மற்றும் முன்னேற்றங்களை கொண்டாடும் தருணமாக எடுத்துக்கொள்ளவேண்டும் எனவும் மனித குலத்திற்கான பொறுப்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என ஐ. நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்ரேஸ் தெரிவித்திருக்கிறார்.


இதுபற்றி பேசிய ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் தலைவர் நடாலியா கனெம், “நமது உலகில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதாக சிலர் கவலை தெரிவிக்கின்றனர். மனிதர்களின் எண்ணிக்கையை கண்டு அச்சப்பட காரணம் ஏதுமில்லை என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *