Vijay - Favicon

இறுதிப்போட்டியில் விளையாட தோனிக்கு தடை விதிக்கப்படுமா – வெடித்தது புதிய சர்ச்சை


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே. அணித்தலைவர் தோனி விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது சென்னை ரசிகர்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சி.எஸ்.கே. வீரர் பதிரனா, 12 ஆவது ஓவரை வீசிய பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுக்க பெவிலியன் திரும்பினார். பின்னர் 16 ஆவது ஓவரை வீசுவதற்கு அவர் களத்திற்கு வந்த போது நடுவர்கள் பதிரனாவை பந்து வீச அனுமதிக்க மறுத்தனர்.

நடுவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட டோனி

இறுதிப்போட்டியில் விளையாட தோனிக்கு தடை விதிக்கப்படுமா - வெடித்தது புதிய சர்ச்சை | Will Dhoni Be Banned From Playing In The Final

விதிப்படி அவர் பந்து வீசுவதற்கு மேலும் 4 நிமிடங்கள் களத்தில் காத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

அப்போது, மகேந்திர சிங் தோனி நடுவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் பதிரனா பந்து வீசுவதற்கு தகுதி பெற்றார்.

வெடித்தது சர்ச்சை

இறுதிப்போட்டியில் விளையாட தோனிக்கு தடை விதிக்கப்படுமா - வெடித்தது புதிய சர்ச்சை | Will Dhoni Be Banned From Playing In The Final

இந்நிலையில்,தோனி வேண்டுமென்றே நடுவர்களுடன் பேசி நேரத்தை தாமதப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்காக, தோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவருக்கு அபராதமோ அல்லது இறுதி ஆட்டத்தில் விளையாட தடையோ விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சி.எஸ்.கே.ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *