Vijay - Favicon

இரட்டை குடியுரிமை உள்ளவர்களின் தகவல்கள் எங்கே உள்ளன – அம்பலப்படுத்திய பொன்சேகா


தற்போதைய நாடாளுமன்றத்தில் சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இருப்பதாகவும், அவர்களைக் கண்டுபிடிப்பது கடினமான காரியம் அல்ல என்றும், குடிவரவுத் திணைக்களத்திலும் அரச தலைவர் என்ற வகையில் அதிபர் இரட்டைக் குடியுரிமைக்கு கையொப்பமிடுவதால், அதிபர் அலுவலகத்திலும் தேவையான ஆவணங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (05) இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

பத்து பேர் நாடாளுமன்றத்தில் 

இரட்டை குடியுரிமை உள்ளவர்களின் தகவல்கள் எங்கே உள்ளன - அம்பலப்படுத்திய பொன்சேகா | Whereabouts Of Dual Citizen Mps Information



“இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அமர முடியாது என்பது இப்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் சுமார் பத்து பேர் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள்.

அவர்கள் யார் என்று தெரியவில்லை, அவர்களைப் பற்றிய விவரங்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதிபர் அலுவலகத்தில் பதிவு

இரட்டை குடியுரிமை உள்ளவர்களின் தகவல்கள் எங்கே உள்ளன - அம்பலப்படுத்திய பொன்சேகா | Whereabouts Of Dual Citizen Mps Information

இரட்டைக் குடியுரிமை பெற்றதன் மூலம், அவர் இந்த நாட்டில் தனது குடியுரிமையை இழக்கிறார். அதன் காரணமாக அவர் மீண்டும் இந்த நாட்டில் தனக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு கோர வேண்டும். பின்னர் அந்த நபர் குடிவரவுத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இரட்டைக் குடியுரிமை நாட்டின் அரச தலைவரால் அங்கீகரிக்கப்பட்டது. எனவே, அது அதிபர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே, நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவது அவ்வளவு கடினம் அல்ல” என்றார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *