ஈழத் தமிழர்களின் வரலாற்று வாழ்வியலில் மிக முக்கியமான இடத்தைப்பெறும் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியானது சிங்கள அரசின் பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டு தமது நகர்வுகளை பௌத்த அடையாளங்கள் என்ற வட்டத்துள் மட்டும் தம்மை நகர்த்திக்கொண்டிருக்கிறது சிறிலங்காவின் தொல்லியல் துறை.
இதனை தனது பிடியில் வைத்துக்கொண்டிருக்கும் தொல்லியல் திணைக்களம், அங்கு காலங்காலமாக தமது இறந்த உறவுகளுக்கான பிதிர்க் கடன்களை நிறைவேற்றிவந்த சைவத்தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை பறித்து அங்கு யாரும் நுழையக்கூடாது என்று கங்கணம் கண்டிக்கொண்டு நிற்கிறது.
இலங்கை வேந்தன் இராவணன் தன் தாயாரின் பிதிர் தர்ப்பண கிரியைகளுக்காக உருவாக்கிய குறித்த ஏழு வெந்நீர் கிணறுகளையும் உள்ளடக்கிய பகுதியை தமது பௌத்த வரலாற்றோடு இணைத்துக் காட்டுவதற்கான நகர்வுகள் மும்முரமாக செய்யப்பட்டுக்கொண்டிக்கிறது.
நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் திருகோணமலை வாழ் சைவத்தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படக்கூடாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், அங்கு யாரும் நுழைய முடியாது எனவும் தங்கள் பகுதிகளில் நீதிமன்ற தீர்ப்பு செல்லாது எனும் தொணியில் காவல் கடமையில் ஈடுபடும் சிறிலங்காவின் காவல்துறை கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் இணைந்து கன்னியாவின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கன்னியா சிவன் ஆலய அறங்காவலர் சபையின் செயலாளர் க. துஸ்யந்தன்்மற்றும் பொருளாளர் தேவகடாட்சம் ஆகியோர் தமது கையறு நிலையை இவ்வாறு பதிவுசெய்துள்ளனர்.