தற்போதைய வருமானத்தில் அரசாங்கத்தின் செலவீனங்களை ஈடுசெய்ய முடியாத காரணத்தினால் வரிகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
வரி புதிதாக விதிக்கப்படவில்லை எனவும், 2019 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
அரசாங்க ஊழியர்களில் 5% போன்ற ஒரு சிலரிடம் இருந்து நேரடி வரி அறவிடப்படுவதாக குறிப்பிட்ட அவர், நேற்று ஒரு நாடு இவ்வாறு சிறிய குழுவினருக்காக வேலைநிறுத்தம் செய்ததாகவும் தெரிவித்தார்.
இந்த தருணத்தில் இந்த வரி ஏய்ப்பு காரணமாக தாம் நீண்டகாலம் அவதிப்பட வேண்டியுள்ளதாக எம்.பி.மேலும் குறிப்பிட்டார்.