ரி20 கிரிக்கெட்டில் வரலாற்றில் 1,100 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
ரி20 உலகக் கிண்ணப் போட்டி 2022 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அபார வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து 2 வது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
முதலில் களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 168 ஓட்டங்களை பெற்றுள்ளது.
உலக சாதனை
இந்திய அணி சார்பாக விராட் கோலி 50 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டியா 63 ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் போது கோலி 19 ஓட்டங்களை அடித்தபோது, ரி20 கிரிக்கெட்டில் வரலாற்றில் 1,100 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.
மேலும், குறித்த பட்டியலில் 2 வது இடத்தில் ஜெயவர்தன (1,016 ஓட்டங்கள்) 3 வது இடத்தில் கிறிஸ் கெய்ல் (965 ஓட்டங்கள்) ஆகியோர் உள்ளனர்.