வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உடைத்து வீசப்பட்டு, ஏனைய விக்கிரகங்களும் சேதமாக்கப்பட்டமை அண்மைய நாட்களில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த அத்துமீறல்கள் தொடர்பில் காவல்துறையில் முறைப்படும், நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பிலான நீதிமன்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
அந்தவகையில், வவுனியா,ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.