Vijay - Favicon

தைவான் கடற்பரப்பில் சீனாவின் இராணுவப் பயிற்சி – அமெரிக்காவின் வலியுறுத்தல்!


தைவானை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு சீனா தொடர்ச்சியாக முனைப்புக் காட்டி வருகின்றது.


தைவான் அதிபரின் அமெரிக்க விஜயத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் 3 நாள் இராணுவப் பயிற்சியை சீனா அறிவித்துள்ளது.


இந்தநிலையில்,தைவான் விடயத்தில் சீனா நிதானமாகவும், அமைதியாகவும் நடந்துகொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா 

தைவான் கடற்பரப்பில் சீனாவின் இராணுவப் பயிற்சி - அமெரிக்காவின் வலியுறுத்தல்! | Usa Urges Restraint China Taiwan Military Drills

பூசலையோ, சர்சையையோ ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் இராணுவப் பயிற்சி நடைபெறும் என சீனா தெரிவித்துள்ளது.


சீனாவின் 70க்கும் மேற்பட்ட போர் விமானங்களும், 9 போர் கப்பல்களும் தைவான் நீரிணை எல்லையைக் கடந்து சென்றுள்ளதாக தைவான் கூறியுள்ளது.


குறித்த விடயம் தொடர்பில், சீனா நிதானமாகவும், அமைதியாகவும் நடந்துகொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவுக்கும் ஆசியாவில் போதுமான வளங்களும், ஆற்றலும் இருப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *