தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது உறவுப்பாலம் நிகழ்ச்சி.
கடந்த 125 பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை – அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் – அவர்களின் குடும்பங்களின் நிலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை, அடிப்படை வசதியற்று வாழும் குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட மன்னாரில் உள்ள தாமரைக்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பமொன்றின் நிலைமையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
கணவனின்றி மூன்று பிள்ளைகளுடன் வாழும் தாயின் ஆதங்கங்களை சுமந்து வருகிறது இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சி,
ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் – (பாகம் – 125)
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.