ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(16) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இதன்போது, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
தேர்தல்களை நடாத்துவதன் ஊடாக இந்நாட்டு மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முகமாக ஐ.நாவின் கூடிய ஈடுபாட்டின் அவசியத்தையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.