Vijay - Favicon

தமிழர் தீர்வு விவகாரத்தில் ஐ.நாவின் தலையீடு – கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்


இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


தீர்வு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் பங்களிப்பு

தமிழர் தீர்வு விவகாரத்தில் ஐ.நாவின் தலையீடு - கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் | Un Contribution Tamils Find Solution Tna Insists


ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் தலைமையிலான குழுவினரை இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.



கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.


இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் , தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசியல் ஸ்திரத்தன்மை

தமிழர் தீர்வு விவகாரத்தில் ஐ.நாவின் தலையீடு - கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் | Un Contribution Tamils Find Solution Tna Insists


இந்தச் சந்திப்பில் இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மை பற்றியும் விசேடமாக வடக்கு, கிழக்கில் தொடர்ந்து இடம்பெறும் நில அபகரிப்பு குறித்தும் எடுத்துக் கூறியதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


இந்த நிலையிலேயே தீர்வு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு அவசியமானது என கூட்டமைப்பு வலியுறுத்தியதாக அவர் கூறினார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *