உக்ரைனின் கிரிமியாவில் தொடரூந்தில் கொண்டு செல்லப்பட்ட ரஷ்ய ஏவுகணை ட்ரோன் மூலம் அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மிக முக்கிய நகரமான கிரிமியாவில் ரஷ்ய ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கிரிமியாவின் வடக்குப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெடிப்பினால் தொடரூந்து மூலம் கொண்டு செல்லப்பட்ட ரஷ்ய ஏவுகணைகளை அழித்ததாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவால் நிறுவப்பட்ட ஜான்கோய் நகரத்தின் ராணுவத் தலைவர், கிரிமியாவின் வடக்குப் பகுதி ட்ரோன்களால் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
உக்ரைன் தான் வெடிகுண்டுகளை ட்ரோன் மூலம் வீசியதாக பகிரங்க அறிவித்துள்ளது. மேலும் “இது ஏவுகணைகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெடிக்குண்டு தாக்குதல் செய்யவில்லை.
மாறாக இது சாதாரண தாக்குதல் தான், ஏவுகணை வெடித்தது எதர்ச்சையாக நடந்துள்ளது.
ரஷ்யாவின் இராணுவ மயமாக்கல் கிரிமியாவின் உக்ரேனிய தீபகற்பத்தை ஆக்கிரமிப்பை நீக்கி திரும்ப செல்ல தயாராகி வருகிறது” என்று உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சக அறிக்கை கூறியுள்ளது.
இந்த ஏவுகணைகள் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டதாக கிய்வ் கூறியுள்ளார்.