உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் காரணமாக ரஷ்ய தயாரிப்பான சிறிலங்கா விமானப்படை பயன்படுத்தி வரும் எம்.ஐ.17 போக்குவரத்து உலங்குவானூர்திகளை பழுப்பார்க்கும் பணியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இடைநிறுத்தியுள்ளன.
அத்துடன் ரஷ்யா எம்.ஐ.17 உலங்குவானுர்திகளை நேட்டோ நாடுகள் பழுதுப்பார்ப்பதற்கும் தடைகளை விதித்துள்ளது.
உலங்குவானூர்திகள் கடந்த 20 ஆண்டுகளாக நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான லித்துவேனியாவில் பழுதுப்பார்க்கப்பட்டு வந்தன.
சிரமத்தில் சிறிலங்கா விமானப்படை
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை காரணமாக சிறிலங்கா விமானப்படை பயன்படுத்தி வரும் ரஷ்யாவின் எம்.ஐ. 17 உலங்குவானூர்திகள் பழுதுப்பார்ப்பது தடைப்பட்டுள்ளது.
இதனால், சிறிலங்கா விமானப்படையினர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.