ரஷ்ய – உக்ரைன் யுத்தம் ஒரு வருடங்கள் கடந்த நிலையில், தீவிரமாக இரு நாட்டு இராணுவமும் போரிட்டு வருகின்றன.
இந்தநிலையில், உக்ரைனின் உள்கட்டமைப்பை தகர்க்கும் வகையில் ரஷ்யா தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது.
உக்ரைனில் உள்ள கோஸ்டியான்டினிவ்கா என்ற நகரத்தில் ரஷ்ய துருப்புக்கள் பயங்கர தாக்குதலை தொடுத்து வருகின்றன.
ரஷ்யாவின் தாக்குதல்
ரஷ்யாவின் குறித்த தாக்குதலின் விளைவாக 30 குடியிருப்பு கட்டிடங்கள் சிதைவடைந்துள்ளன.
இது தாக்குதலில் 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் அரச தரப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
குடியிருப்பு கட்டிடங்கள் மட்டுமின்றி ரயில் நிலையங்கள், மார்கெட் மற்றும் தனியார் விடுதிகள் மீதும் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.