Vijay - Favicon

உக்ரைனிடம் அணு குண்டு உள்ளதா -ஐ.நாவின் அறிவிப்பு வெளியானது


  ஐக்கிய நாடுகள் சபை நடத்திய விசாரணைகளின்படி, உக்ரைனில் அணு ஆயுதங்கள் தொடர்பான எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அழுக்கு குண்டு(dirty bomb) என்ற கதிரியக்க பொருட்கள் அடங்கிய வெடிகுண்டை உக்ரைன் தயாரித்து வருவதாகவும், அது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அண்மையில் ரஷ்யா குற்றம்சாட்டியிருந்தது.

உக்ரைன் சென்ற ஐ.நா குழு

உக்ரைனிடம் அணு குண்டு உள்ளதா -ஐ.நாவின் அறிவிப்பு வெளியானது | Ukraine Has No Nuclear Weapons Un

கடந்த வியாழன் அன்று ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை உக்ரைனுக்கு அனுப்பியது. அவர்களின் அவதானிப்புகளின்படி, உக்ரைனில் சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு

உக்ரைனிடம் அணு குண்டு உள்ளதா -ஐ.நாவின் அறிவிப்பு வெளியானது | Ukraine Has No Nuclear Weapons Un



கடந்த மாதம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும், கதிரியக்க பொருட்கள் அடங்கிய அழுக்கு வெடிகுண்டு எனப்படும் ஆயுதத்தை பயன்படுத்த உக்ரைன் தயாராகி வருவதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *