டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் எலன் மஸ்க் ஊழியர்களிடம் இரண்டு தெரிவுகளை முன்வைத்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்கள் நீண்ட நேரம் கடுமையாக வேலை செய்வதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்கள் வேலையை விட்டு விலகவேண்டும் என்று நிறுவன அளவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் எலன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு வேலையை விட்டு விலகுவோருக்கு 3 மாதச் சம்பளத்திற்கு ஈடான இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எலன் மஸ்க்கின் கண்டிப்பான உத்தரவு
போட்டித்தன்மை வாய்ந்த உலகில் புதுமையான டுவிட்டர் தளத்தை உருவாக்குவதற்கு அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் கடந்த மாதம் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார். இவர் 7,500 ஊழியர்களில் பாதிப் பேரை ஆட்குறைப்புச் செய்ததோடு மூத்த தலைவர்கள் சிலரையும் பணிநீக்கம் செய்தார்.
இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைவர் ஒருவரை விரைவில் தேர்ந்தெடுக்கவுள்ளதாக மஸ்க்(Elon Musk) தெரிவித்துள்ளார்.