Vijay - Favicon

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரம் கணிசமாக குறைவடைந்த நிலையில் இன்று (21) இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை திங்கட்கிழமை ரூ.332.81ல் இருந்து ரூ.320.27 ஆகவும், விற்பனை விலை ரூ.356ல் இருந்து ரூ.343 ஆகவும் குறைந்துள்ளது.



கொமர்ஷல் வங்கியில், கொள்முதல் விலை திங்கட்கிழமை ரூ. 331.48 ஆக இருந்து இன்று ரூ.314 ஆக குறைந்துள்ளது.



மேலும், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 315 ஆகவும், விற்பனை விலை ரூ.330 ஆகவும் குறைந்துள்ளது. 

யூரோ ஒன்றின் பெறுமதி

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம் | Todays Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.



இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 355.88 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 335.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Gallery



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *