விசா
போலி விசாவைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குச் செல்ல முயன்ற மூன்று இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று இலங்கையர்களும் லண்டன் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் தங்களுடைய குடியகல்வு நடைமுறைகளை சரிசெய்வதற்காக விமான நிலையத்தில் உள்ள குடியகல்வு பிரிவுக்கு சென்றிருந்தனர்.
இதன்போது கடமையில் இருந்த குடியகல்வு அதிகாரிகள், அவர்களது பயண ஆவணங்களை ஆய்வு செய்த போது, விசாக்களின் துல்லியம் குறித்து சந்தேகம் அடைந்து, பின்னர் அவை போலியானது என கண்டறிந்தனர்.
யாழ்ப்பாணம் – மல்லாவி – சாவகச்சேரி
இதனையடுத்து, யாழ்ப்பாணம், மல்லாவி மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23 மற்றும் 31 அகவைகளைக் கொண்ட இந்தப் பயணிகள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.