உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளது.
அனைத்து பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 2021 ஆம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கணக்கு அறிக்கை
இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்குள் கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
எனினும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பினை மீறும் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதப்பட மாட்டாது என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் மார்ச் 23 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கலந்துரையாடலை நடத்தவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.