அகிம்சை
இலங்கையில் 35 வருடங்களுக்கு முன்னர் தமிழர் தாயகத்தின் முதன்மைத் தியாகியாக உருவாகிய திலீபனின் பன்னிரு நாள் அறவழித் தடத்தின் ஆறாம் நாள் இன்றாகும்.
இந்தியாவிடம் தாயகத்திற்கு நீதிகோரி அவர் நடத்திய இந்த ஈகப் பயணத்தில் 35 வருடங்களுக்கு முன்னரான இன்றைய நாளில் அவரது உடல் நிலை தளர ஆரம்பித்திருந்தது.
அந்த நாட்களில் நீர் மற்றும் உணவு கிட்டாத அவரது உடலில் எதிர்பார்க்கக்கூடிய இயங்கியல் முடக்கம் கவலைக்குரிய வகையிலே இருந்தது.
15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ்.நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய அவர், தனது உயிரைத் தியாகம் செய்து கொண்டார்.
ஈழத்தமிழ் மக்களின் விடிவிற்காய் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூர் முன்றலில் ஆகுதியாகிய திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள், அவரது நினைவுச்சிலை அமைந்துள்ள இடத்தில் கடந்த 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு 26 ஆம் திகதி வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் ஒவ்வொரு நாளும் மாவீரர்களின் பெற்றோரினால் நினைவுச்சுடர் ஏற்றிவைக்கப்படுகிறது.
ஆறாம் நாள் நினைவலைகள்