Vijay - Favicon

வேலை நிறுத்தத்தால் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை


இலங்கையில் இன்றையதினம் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானதாக தெரியவருகிறது.




பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் இன்றையதினம் நுவரெலியாவுக்கு வருகைதந்தனர்.

அவர்களை வழிநடத்தும் இலங்கையைச் சேர்ந்த வழிநடத்துனர்கள் சிலரும் அவர்களுடன் கூட இருந்தனர்.

சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளமுடியவில்லை

வேலை நிறுத்தத்தால் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை | The Situation Of The Tourists Due To The Strike

பேருந்துகளில் நுவரெலியாவுக்கு செவ்வாய்க்கிழமை (14) வருகைதந்த அவர்கள், நுவரெலியாவில் பழைய தபால் காரியாலயத்தை பார்வையிட்டதன் பின்னர், நானுஓயாவில் இருந்து எல்லைக்கு ரயிலில் செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.


எனினும், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தாங்கள் திட்டமிட்டதன் பிரகாரம், சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளமுடியவில்லை என அவர்கள் பெரும் விரக்தி அடைந்ததாக வழிகாட்டியினர் தெரிவித்தனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *