Vijay - Favicon

தாதி வழங்கிய பால் தேநீரால் மயக்கமடைந்த மருத்துவர்


மருத்துவமனையில் இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்தவேளை தாதி ஒருவர் வழங்கிய பால் தேநீரால் மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்து மருத்துவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த தகவலை தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இரவு நேர கடமையின் போது சம்பவம்

[O0SDA


இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த மருத்துவருக்கு இரவு 10 மணியளவில் தாதி ஒருவர் பால் தேநீர் வழங்கியுள்ளார்.

அதனை அருந்திய பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்றபோது மயக்கம் ஏற்பட்டதாகவும் தனக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிவித்த மருத்துவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணை

தாதி வழங்கிய பால் தேநீரால் மயக்கமடைந்த மருத்துவர் | The Doctor Fainted From The Milk Tea


கொழும்பைச் சேர்ந்த குறித்த மருத்துவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனியாக இருப்பதாகவும் சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *