கைது
ஹுங்கம பிரதேசத்தில் தரம் ஐந்தை சேர்ந்த மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
புலமைப் பரிசில் பரீட்சைக்கு தயாராகி வரும் மாணவியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆசிரியர் தனது மகளை தொடர்ச்சியாக தாக்கி வருவதாக பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மாணவியின் வகுப்பாசிரியர்
இதற்கிணங்க நேற்றைய தினம் குறித்த நபரை கைது செய்துள்ளதாக ஹுங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான மாணவி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மாணவியின் வகுப்பாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.