தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மலேசியாவில் துன்பப்படும் காணொளி வெளிவந்திருக்கிறது.
தரகர்கள் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு கூட்டிச்சென்று வேலையில் ஈடுபடுத்தியுள்ளார்கள் என்றும், சம்பளம் கேட்டால் அடித்து துன்புறுத்துகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
தாம் 3 பேர் சென்றதாகவும், அதில் ஒருவர் இறந்து விட்டதாகவும், தற்போது இருவரே இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
தற்போது உண்பதற்கு கூட வழி இல்லாது, உறவுகளுடன் பேசவும் முடியாமல் தவித்து வருவதாக அவர் கூறுகிறார்.
அடி தாங்க முடியாது தாம் வேறு ஓரிடத்தில் மறைந்திருப்பதாகவும், தமிழ் நாட்டு அரசாங்கமே தமக்கு உதவ வேண்டும் எனவும் அவர் கோருகிறார்.