Vijay - Favicon

அவுஸ்திரேலிய குளமொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட தமிழ்க் குடும்பம்..!


அவுஸ்திரேலியா – கான்பெராவின் வடபகுதியில் உள்ள குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றை சேர்ந்த மூவர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



யெராபி குளத்திலிருந்து தாயினதும் இரண்டு சிறுவர்களினதும் உடல்களை காவல்துறையினர் மீட்டிருந்தனர்.

அதேவேளை, குளத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டடிருந்த வாகனமொன்றையும் காவல்துறையினர் மீட்டிருந்தனர்.


இதில் உயிரிழந்த மூவருக்குமே தொடர்புள்ளதாக கருதுகின்றோம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலையா தற்கொலையா 

அவுஸ்திரேலிய குளமொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட தமிழ்க் குடும்பம்..! | Tamils Family Who Died In An Australian Pond

இந்நிலையில், தமிழ் குடும்பம் உயிரிழந்தமை குறித்து கொலையா தற்கொலையா என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் கூறியுள்ளனர்.


அதேவேளை, விசாரணைகள் குழப்பமானவையாக காணப்படுவதாலும் இன்னமும் பூர்த்தியடையாததாலும் உயிரிழப்புகளிற்கான காரணங்கள் குறித்த தெளிவான அறிக்கையை மரணவிசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *