அருணாச்சல பிரதேசத்தின் மாண்ட்லா மலைப்பகுதியில் இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானதில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி என்றும், மேஜர் ஜெயந்த் என்றும் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்த இராணுவ வீரர்களில் ஒருவர் தமிழர் என்றும் தெரியவந்துள்ளது.
அவரது உடல்
குறித்த தமிழர் தேனி மாவட்டத்தின் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அவரது உடல் ஜெயமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.