யுத்தம் முடிந்த பின்னும் சமாதானம் என்பது தமிழ் அரசியல் கைதிகளுக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகிறது என ரகுபதி சர்மா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நமது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“பயங்கரவாத தடை சட்டத்தை பொறுத்தமட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை என்பது அரிது.
கையெழுத்து போராட்டம்
குறித்த சட்டம் இருக்கவேண்டுமா என்பதற்கு பிரதி விம்பமாக நானே இருக்கிறேன்.
கையெழுத்து போராட்டம் மூலம் இதற்கான தீர்வை கொண்டு வர முடியும் என்பது என்னுடைய கருத்து.
உடனடியாக தீர்வு கிடைக்காவிட்டாலும் எழுத்து என்பதற்கான மதிப்பின் அடிப்படையில் இதற்கான தீர்வை பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற காலி முகத்திடல் போராட்டத்தில் கைதானவர்களை நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த மெகஸின் சிறைக்கே கொண்டு வந்தனர்.
அப்போது என்னிடம் ”நீங்கள் படும் துன்னபத்தை இப்போது நாங்கள் கண்ணால் காண்கிறோம்” என்றனர்.” என கூறியிருந்தார்.