Vijay - Favicon

தமிழக முகாமில் தற்கொலை செய்துகொண்ட ஈழத்தமிழ் பெண்!


இந்தியாவின் தமிழகத்தில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கரூர் தாந்தோன்றிமலை அருகே, இலங்கை தமிழர் முகாமில் வசித்து வரும் தர்மராஜேஸ்வரன் யோகலதா வயது 36 என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். 

குடும்ப தகராறு

தமிழக முகாமில் தற்கொலை செய்துகொண்ட ஈழத்தமிழ் பெண்! | Tamil Nadu India Sri Lankan Tamil Women Death

தர்மராஜேஸ்வரன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் கணவன், மனைவி இடையே குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குறித்த பெண் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து கிடைக்கப்பபெற்ற முறைப்பாட்டின் பேரில் தாந்தோன்றிமலை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


விசாரணை முடிவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *