தமிழக அரசை பகடைகாயாக பயன்படுத்தமுனையும் தமிழக ஆளுநர்
ரவியின் முயற்சிகள் பலிக்காதென திமுக நாடாளுமன்ற உறுப்பினர்
வெங்கடேசன் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் பேசுகையில், “ஆளுநர் என்ன செய்யவேண்டும். என்ன செய்யக்கூடாது என்று அனைத்து வகையான குரல்களும் ஒலிக்கின்றன. அந்தக் குரல்கள் முக்கியமல்ல. எமக்கு இந்திய அரசியலமைப்பு மட்டுமே முக்கியமானது.
உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் அரசியலமைப்பை வெளிப்படுத்தும் அமைப்புகள். ஆளுநரின் நடவடிக்கைகள் சரியானதா? இல்லையா?என்பதை நீதித்துறை முடிவு செய்யும் எனக் கூறியதுடன்,
திமுக கருத்து
காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க
தமிழகத்திலிருந்து செல்லும் குழுக்களை இன்று வழியனுப்பிய நிகழ்வில்
உரையாற்றிய ஆளுனர்,
இந்தியாவை புரியவேண்டுமானால் பாரதத்தையும்
புரிந்துகொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள நிலையில் திமுக
தரப்பில் இருந்து இந்தக் கருத்து வந்துள்ளது.