போலி விசாக்களை பயன்படுத்தி வெளிநாட்டக்கு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி விசாக்களை பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு செல்ல முயன்ற மூன்று இலங்கையர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு
அதிகாரிகளால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த மூன்று இலங்கையர்களும் லண்டன் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குடிவரவு பரிசோதனை
விமானத்திற்கு செல்வதற்கு முன்னர் தங்களுடைய குடிவரவு நடைமுறைகளை சரிசெய்வதற்காக விமான நிலையத்தில் உள்ள குடிவரவு
பரிசோதனை பிரிவுக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடமையில் இருந்த குடிவரவு அதிகாரிகள், அவர்களது பயண ஆவணங்களை ஆய்வு செய்த போது, விசாக்களின் துல்லியம்
குறித்து சந்தேகம் அடைந்து, பின்னர் அவை போலியானது என கண்டறிந்தனர்.
யாழ்ப்பாணம், மல்லாவி மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23ற்கு உட்பட்ட இருவரும் 31 வயதுடைய ஒருவருமே இவ்வாறு
கைதுசெய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.