Vijay - Favicon

அடைத்து வைத்து சித்திவதை: வெளிநாடுகளில் இலங்கை பெண்களின் பரிதாப நிலை..!


வெளிநாடுகளில் தொழிலுக்காக செல்லும் இலங்கை பெண்களை அடைத்து வைத்து சித்திவதைக்குட்படுத்தப்படும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.


செல்லகத்தரகம, கொஹோம்பதிகான பகுதியைச் சேர்ந்த எச்.எம்.தில்ருக்ஷி என்ற பெண் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்று காணாமல் போனதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.


இந்த நிலையில் அவர் அனுப்பிய காணொளி ஒன்று ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளது.

“ஒரு அறையில் சுமார் 20 முதல் 30 பேர் வரையில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களுக்கு சாப்பாடு கூட வழங்கப்படுவதில்லை.

இலங்கைப் பெண்களை விற்பனை

அடைத்து வைத்து சித்திவதை: வெளிநாடுகளில் இலங்கை பெண்களின் பரிதாப நிலை..! | Sri Lankan Women Will Be Imprisoned And Tortured

தினமும் அவர்களை சென்று வெவ்வேறு இடங்களில் விற்பனை செய்து 6 முதல் 7 மணி நேரம் வேலை செய்ய வைக்கிறார்கள். பணம் வழங்குவதில்லை. முகவரிடம் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.


இலங்கைப் பெண்களை வரிசையில் வைத்து விற்பனை செய்கின்றார்கள். 19,500 ரூபாய்க்கு இரண்டாம் நிலை பெண்கள் எனவும், 30,000 ரூபாய்க்கு புதியவர்கள் எனவும் மதிப்பிடுகிறார்கள். தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இவர் 4 பிள்ளைகளின் தாயாகும். தில்ருக்ஷியின் கணவர் சமில்சிறி நந்தா, தனது மனைவியை அழைத்து வர தலையிடுமாறு காவல்துறை நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *