இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையானது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நவம்பர் முதல் வாரத்தில் இருந்து நவம்பர் இரண்டாவது வாரம் வரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது 19% ஆல்
அதிகரித்தள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தள்ளது.
சபையின் நவம்பர் மாதத்திற்கான தற்காலிக தரவுகளின்படியே இவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கை வெளியீடு.
நவம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 27,213 ஆக இருந்தது என்றும்
ஆண்டிற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையானது 600,000 ஐக் கடக்க இலங்கை குறுகிய தொலைவில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 01 முதல் நவம்பர் 15 வரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையாது 595,471 ஆக இருந்ததாகவும் ஒக்டோபர் நான்காவது வாரத்தில் இருந்து, இலங்கை தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு 10,000 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளதாகவும்
குறிப்பிடப்படுகின்றது.
சுற்றுலாப் பயனிகளின் வருகையில் 25 சதவீததம் ரஷிய நாட்டிலிருந்தும் 16 சதவீதம் இந்தியாவிலிருந்தும் 8 சதவீதம் இங்கிலாந்திலிருந்தும் வருகைத்தந்ததாக குறிப்பிடப்படுகின்றது.