Vijay - Favicon

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல் – விமான டிக்கெட்டுக்களின் விலைகளில் மாற்றம்


இலங்கையில் டொலரின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு ஏற்ப விமான டிக்கெட்டுக்களின் விலையும் 20 வீதத்தால் குறைந்துள்ளதாக கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


இலங்கையில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.


டொலர் விலை குறைவினால் விமான டிக்கெட்டுகளின் விலையை குறைக்குமாறு இலங்கையில் உள்ள விமான நிறுவன பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் விமான டிக்கெட்டுகளின் விலைகளை மேலும் குறைப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய விமான சேவைகள்

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல் - விமான டிக்கெட்டுக்களின் விலைகளில் மாற்றம் | Sri Lanka Tourism Plate Tickets Rate

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி படிப்படியாக குறைவடைந்துள்ள நிலையில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான போக்கு காணப்படுவதாகவும், அதற்கமைவாக சுமார் 7 புதிய விமான சேவைகள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *