Vijay - Favicon

இலங்கையில் அதிகரிக்கும் கருத்தடை அறுவை சிகிச்சைகள் – வெளியான அதிர்ச்சிகர அறிக்கை


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபர அறிக்கையின்படி, தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளால் கருத்தடை சத்திரசிகிச்சை உள்ளிட்ட குடும்பக்கட்டுப்பாடுகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


அந்தத் தரவுகளின்படி, இலங்கையில் 225,492 பேர் கொண்ட குழு 2021 இல் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விண்ணப்பித்துள்ளது.

அவர்களில் 29,993 பேர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அதிகரித்து செல்லும் குடும்பக் கட்டுப்பாடு

இலங்கையில் அதிகரிக்கும் கருத்தடை அறுவை சிகிச்சைகள் - வெளியான அதிர்ச்சிகர அறிக்கை | Sri Lanka Sterilization Surgeries On The Rise



2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில் 96,963 பேர் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

09 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிக எண்ணிக்கையிலான கருத்தடை அறுவை சிகிச்சைகள் 2021 இல் நடந்தன.

இதற்கு முன், 2012ல் தான் அதிக எண்ணிக்கையிலான கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அது 21,109 ஆகும்.



2021 ஆம் ஆண்டில், குடும்பக் கட்டுப்பாடு அமைப்பின் கீழ் 28,531 பெண்கள் கண்ணி(worn loops) அணிந்துள்ளனர். 44,462 பெண்கள் வாய்வழி கருத்தடைகளைப் பயன்படுத்தியுள்ளனர். 79,622 பெண்கள் தடுப்பூசிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.  



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *