மகிந்தவின் மகன் யோசித கடந்த தேர்தலில் போட்டியிடவிருந்த நிலையில், கோட்டாபய அதனைத் தடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த தகவலை, கூடியிருந்து மனக்கசப்பிற்குள்ளான நிலையில், தாம் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்து பிரிந்து சென்ற விமல் வீரவன்சவே வெளிப்படுத்தியுள்ளார்.
பலகாலமாக ஒன்று கூடியிருந்து பல அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஏனைய பல செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்த நிலையில், கோட்டாபய அதிபரானதும் தனது அதிகாரத்தை வைத்து பங்காளிகளின் எதிர்ப்பின் மத்தியிலும் மில்லேனியம் சவால் (எம்.சி.சி.) உடன்படிக்கையில் கையெழுத்திட்டமையால் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றனர்.
விமர்சிக்கப்படும் ராஜபக்சக்கள்
அதன் பின்னர் ராஜபக்ச குடும்பத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தும் வருகின்றனர். கூட்டுச்செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் போது, மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயற்பாடுகளையும் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி தாமே விமர்சித்த வருகின்றமையும் கண்கூடு.
இவ்வாறான செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே கடந்த தேர்தலில் அண்ணனின் மகனையே களமிறக்க வேண்டாம் என கோட்டாபய உத்தரவு போட்டதாகவும் தற்போது தகவலை கசிய விட்டுள்ளார்.
கோட்டாபயவின் தீவிர முயற்சி
அவ்வாறு மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராக இருந்த போதிலும், டலஸ் அழகப்பெரும கோட்டாபய ராஜபக்சவிடம் விடுத்த கோரிக்கையாலேயே அது நடக்கவில்லை எனவும் வெளிப்படையாகவே ஆளைக் காட்டிக்கொடுத்துள்ளார்.
யோசிதவை பதுளையில் களமிறக்கவுள்ளோம் என டலஸ் கோட்டாபயவிடம் கூறிய போது, அந்த முட்டாள் தனத்தை மட்டும் செய்துவிடாதீர்கள் என கோட்டாபய கூறியிருந்தார்.
அப்படி செய்தால் ஆடை அணிந்து வீதியில் செல்ல முடியாமல் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளார். எப்படியோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு கோட்டாபய அதனை தடுத்து நிறுத்தி விட்டார்.
தேர்தலில் வெற்றிபெற்ற தேனுக
கோட்டாபயவின் இந்த செய்தியாலேயே பதுளையில் டிலான் ஒரு நொடிப்பொழுதில் தப்பித்தார். இதேவேளை, அந்நாட்களில் மஹியங்கனையில் தேனுகவும் குழப்பத்தில் இருந்தார்.
அவ்வாறான நிலையிலும் 49 வயதான தேனுக விதானகமகே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று பதுளை மாவட்டத்தில் மூன்றாவது இடத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கையின் 19ஆவது விளையாட்டுத்துறை அமைச்சராகவும் அப்போது பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராகவும் அனுபவம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.