32 வயதுடைய காதலனுடன் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த 7ஆம் தர மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (16) மாலை சாலியவெவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி பாடசாலையின் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர், பகல் 12 மணியளவில் பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர் சந்தேக நபர் மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
காவல்துறைக்கு சென்ற தகவல்
ராஜாங்கனை வீரபுர பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியும் சந்தேக நபரும் தங்கியிருப்பதை நபர் ஒருவர் பார்த்து சாலியவெவ காவல்துறைக்கு அறிவித்துள்ளார்.
பின்னர் காவல்துறை அதிகாரிகள்
சம்பவ இடத்திற்கு வந்து மாணவியை சந்தேக நபருடன் கைது செய்துள்ளனர்.விசாரணையின் போது, கையடக்கத் தொலைபேசி ஊடாக வந்த அழைப்பின் பேரில், பாடசாலை முடிந்ததும் அப்பகுதிக்கு வந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.
சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலையில்
சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் சாலியவெவ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.