சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.
அதில் மக்களுக்கான அடிப்படைத்தேவைகளோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணமோ எதுவுமே தெரிவிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா விசனம் வெளியிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு என்ன வழி என்று அதிபர் கூறவில்லை. மாறாக அரசுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களை, மக்களை கைது செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களை அடக்கி ஒடுக்கும் வரவு-செலவுத்திட்டம்
இது எதற்காக.
மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோட்டாபய என்ற அதிபர் நாட்டில் பலவற்றை அதிகரித்துச் சென்றார்.
அதில் ஒன்று தான் வறுமை. மூன்று மடங்காக வறுமையை அதிகரித்து விட்டு அவர் சென்று விட்டார்.
காக்கையின் கூட்டில் முட்டையிடும் குயில், அப்படித்தான் ரணில் கூடு ஒன்றில் சிக்கியுள்ளார்.
அதிலிருந்து அவர் வெளியே வர முடியாது.
இப்போது உள்ளவர் காவல்துறையினருக்கும், இராணுவத்தினருக்கும்,அதிரடிப் படையினருக்கும் அதிக நிதியை அள்ளி இறைத்துள்ளார்” எனவும் தெரிவித்துள்ளார்.