Vijay - Favicon

பலாலி விமான நிலையத்தின் சேவைகள் விரைவில் – ஊடக சந்திப்பில் பிரேமலால் ஜயசேகர


பலாலி விமான நிலையத்தின் சேவைகள் இன்னும் குறுகிய நாட்களுக்கள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய
துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர 2022 இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தின்
சேவைகள் ஆரம்பிக்கப்படும் என அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.


மேலும், தற்போதுள்ள சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த வேலை திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார் எனவும்
கூறியிருந்தார்.   

வேலை திட்டம்

பலாலி விமான நிலையத்தின் சேவைகள் விரைவில் - ஊடக சந்திப்பில் பிரேமலால் ஜயசேகர | Sri Lanka Palaly Airport Premalal Jayasekara

மேலும் அவர் “நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டி தந்த காங்கேசன்துறை துறைமுகம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண
சூழ்நிலை காரணமாக அழிவடைந்து தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.

இவ்வாறான சம்பவங்கள் மூலமே எமது நாட்டில் பொருளாதார
நெருக்கடிக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மீள வேண்டுமேயாக இருந்தால் காங்கேசன்துறை துறைமுகம் போன்ற
பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய இடங்களை நாங்கள் மீள புதுப்பித்து அவற்றை செயல்படுத்துவதன் மூலமே நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்.

அவ்வாறான வேலை திட்டங்களை ஆரம்பித்து மிக விரைவில் இந்த துறைமுகத்தினை செயற்படுத்துவதற்கு நாங்கள் முனைகின்றோம். அதேபோல் பலாலி சர்வதேச விமான நிலையமும் நமக்கு ஒரு வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு விமான நிலையம் ஆகும்.

இந்தியாவின் உதவி

பலாலி விமான நிலையத்தின் சேவைகள் விரைவில் - ஊடக சந்திப்பில் பிரேமலால் ஜயசேகர | Sri Lanka Palaly Airport Premalal Jayasekara

குறிப்பாக இந்திய நாட்டின் உதவியையும் நாங்கள் கோரவுள்ளோம். ஏற்கனவே நாங்கள் இந்திய நாட்டின் உதவியுடன் சில வேலை
திட்டங்களை இங்கே முன்னெடுத்து இருக்கின்றோம்.ஆனால் இங்கே பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஓரிரு மாதங்களில் பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அவ்வாறு ஆரம்பித்தால் இலங்கையில் உள்ள மூவின மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டில்
பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும். 

ஆனால் இவை விரைவில் சாத்தியப்பட வேண்டும் என இறைவனை
பிரார்த்திப்பதாக” இச்சந்திப்பில் கூறியிருந்தார். 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *