வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் ஏற்றுமதி வருமானம் பெறுபவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை டொலர்களை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய வங்கி நடைமுறையில் வைத்திருந்தது.
நாணய மாற்று வீதம் தொடர்பில் நடைமுறையில் இருந்த குறித்த கட்டுப்பாட்டை இலங்கை மத்திய வங்கி நீக்கத் தீர்மானித்துள்ளது.
நடைமுறை நீக்கம்
குறித்த நடைமுறையை இம் மாதத்திலிருந்து இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து தற்போது பெறப்படும் வருமானத்தின் அளவு காரணமாக ஏற்றுமதி வருமானத்தின் ஒரு பகுதியை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சமீபத்திய நாட்களில் அமெரிக்க டொலரின் கையிருப்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.