Vijay - Favicon

ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது – திட்டவட்டமாக கூறிய கடற்றொழல் அமைச்சர்


இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என கடற்றொழல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


இன்று மாலை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் மாலை 03:30 மணியளவில் வடமராட்சி வடக்கு கடற்றொழலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், மீனவர்களது பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

முதற்கட்டமாக இத்திய மீனவர்களது இழுவைப் படகு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்திய கடல் எல்லையில் ஆர்ப்பாட்டம்

ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது - திட்டவட்டமாக கூறிய கடற்றொழல் அமைச்சர் | Sri Lanka India Fishing War

தமிழக இராஜாங்க அமைச்சர் திரு முருகன், இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பஜாக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடமும் இராஜ தந்திர ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என.

இனி இந்திய கடல் எல்லையில் படகுகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடாத்தித் தான் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியுள்ளது.



அப்போது இந்திய ஊடகவியலாளர்களும், இலங்கை ஊடகவியலாளர்களும் நேரில் வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளை அவதானித்துச் செல்லட்டும்.



அப்போது தான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *