அரசாங்கத்தில் இருந்து பல உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சிக்கு வர போகின்றார்கள் என்பது உண்மை.”
இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
கட்சித் தாவல்கள் தொடர்பிலும், ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் செல்லவுள்ள உறுப்பினர்கள் தொடர்பிலும் ஹர்ஷன ராஜகருணாவிடம் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கட்சி தாவல்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கத்துடன் எமது கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
அரசங்கத்தில் இருந்த 50 பேர் எதிர்க்கட்சியின் பக்கம் அமர்ந்துள்ளார்கள், எங்களது உறுப்பினர்கள் நால்வர் அரசாங்கம் பக்கம் சென்றுள்ளார்கள்.
இருப்பினும், கட்சி மாறிய உறுப்பினர்களின் அடிப்படையில் பார்க்கும்போது அரசாங்கம் தான் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குக் பாடுபடுகிறார்.
அரச தரப்பு
எமது கட்சியில் உள்ளவர்கள் அரசாங்கத்துடன் இணைவதை விட, அரசாங்கத்தில் இருந்து பலர் விரைவில் எதிர்க்கட்சிக்கு வரப்போகின்றார்கள் என்பதுதான் உண்மை.
ஆனால், இது பற்றி அல்லது எதிர்க்கட்சிக்கு ஏற்கனவே வந்துள்ள 50 பேர் பற்றியோ அரசாங்கம் பேசுவதில்லை.
எமது கட்சியில் இருந்து அரசாங்கம் பக்கம் சென்ற நால்வர் பற்றியே தற்போது பேசப்படுகின்றது.
எனக்கும் அரசாங்கத்திடம் இருந்து அழைப்பு வந்தது, எனது தந்தைக்கும் ரணிலுக்கும் இடையில் நீண்ட உறவு இருந்தது.
அப்படிப்பார்த்தால் நான்தான் முதலில் போய் அரசாங்கத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
நான் தனிப்பட்ட உறவைப் பார்த்து அரசியல் செய்யவில்லை, கொள்கை ரீதியான அரசியல் செய்கின்றேன்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.