Vijay - Favicon

ரூபாவின் பெறுமதி உயர்ந்தால் இலங்கை மீது அமெரிக்கா குண்டு வீசும் – கொடுக்கப்பட்ட பதிலடி!


இலங்கை ரூபாவை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் பலவந்தமாக தீர்மானங்களை நிறைவேற்றி அதனை பலப்படுத்த முடியாது என்று ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பனர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி உயர்ந்தால் இலங்கை மீது அமெரிக்கா குண்டுகளை வீசும் என்று சுனில் ஹந்துன்நெத்தி கூறிய கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேய அவர் இவ்வாறு தெரித்துள்ளார்.

அமெரிக்கா குண்டு வீசுமா

ரூபாவின் பெறுமதி உயர்ந்தால் இலங்கை மீது அமெரிக்கா குண்டு வீசும் - கொடுக்கப்பட்ட பதிலடி! | Sri Lanka Election Sjb Rise America Dollar

ஜக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சுவர் வேலைத்திட்டத்துடன் இணைந்து நேற்றைய தினம் கெக்கிராவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிக்கையில்,

“மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களின் அறிவு என்பது கிணற்றில் உள்ள தவளை கூட்டத்தைப் போன்றது. இந்த நேரத்தில் ரூபாயின் பெறுமதி மிகவும் முக்கியமானது.

ரூபாவின் உயர்வுக்கான வழிமுறைகள்

ரூபாவின் பெறுமதி உயர்ந்தால் இலங்கை மீது அமெரிக்கா குண்டு வீசும் - கொடுக்கப்பட்ட பதிலடி! | Sri Lanka Election Sjb Rise America Dollar


ரூபாவின் பெறுமதியை உயர்த்துவதற்கு பொருளாதாரத்தில் அதற்கான 04 வழிமுறைகள் உள்ளன. அதாவது,  ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவுபடுத்துதல், வெளிநாட்டுப் பணத்தை அனுப்புதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் நாட்டிற்கு பணம் புழங்கும் வேலைத்திட்டம் தயாரித்தல்” என்றும் குறிப்பிட்டார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *