Vijay - Favicon

கமல் குணரட்ணவின் பதவி மகேஸ் சேனாநாயக்கவுக்கு கைமாறுகிறதா – கசிந்தது தகவல்!


சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்குமாறு, மகேஸ் சேனாநாயக்கவை, ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலர், தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகேஸ் சேனாநாயக்கவின் நியமனம் தொடர்பில் உயர்மட்ட அரச அதிகாரிகள் அவருடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த பேச்சுவார்த்தையின் போது,  துறைகளில் மாற்றங்கள் இடம்பெற்றாலேயே, சிறந்த சேவைகள் வழங்கப்படும். இது நடந்தால் நிச்சயம் நான் பதவியேற்பதாக அந்த அரச அதிகாரிகளிடம், மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

பதவியேற்குமாறு கோரிக்கை

கமல் குணரட்ணவின் பதவி மகேஸ் சேனாநாயக்கவுக்கு கைமாறுகிறதா - கசிந்தது தகவல்! | Sri Lanka Defense Secretary New Appointment Army

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்கவுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருகின்றன எனவும் தென்னிலங்கை வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

புதிய பதவி

கமல் குணரட்ணவின் பதவி மகேஸ் சேனாநாயக்கவுக்கு கைமாறுகிறதா - கசிந்தது தகவல்! | Sri Lanka Defense Secretary New Appointment Army

இதேவேளை, தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ணவுக்கு வெளிநாட்டு தூதுவர் பதவியொன்று வழங்கப்படலாம் என்றும் ஒரு எதிர்வு கூறல் எழுந்துள்ளது.


பாதுகாப்பு துறையில் சிற்சில மாற்றங்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு மாற்றங்கள் இடம்பெற்ற பின்னர் தகுதியானவர்கள் அந்தந்த இடங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என் நோக்கத்துடனேயே இவ்வாறான மாற்றம் இடம்பெறுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *