இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
ஒக்லேண்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் ஐசிசி இந்த அபராதத்தை விதித்துள்ளது.
இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியினர், தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் இலக்கை விட ஒரு ஓவர் குறைவாக வீசியிருந்ததாக ஐ.சி.சி போட்டி மத்தியஸ்தர் ஜெஃப் குரோவினால் தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அவசியமில்லை
இந்தநிலையில், தாமதமான பந்துவீச்சு வீதத்தை பேணியதாக இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால் முறையான விசாரணைக்கு அவசியமில்லையென சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.