கல்கமுவ பகுதியில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருணாகல், கல்கமுவ இஹலகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தள்ளனர்.
இவர்கள் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மதிலில் மோதி, ஏற்பட்ட விபத்திலேயே மூவரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்து இடம்பெற்ற போது வாகனத்தில் ஐந்து பேர் பயணித்துள்ளதாகவும், விபத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் கல்கமுவ மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த இராணுவ மேஜர் 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.