Vijay - Favicon

வெளிநாடொன்றில் வணிக வளாகத்தில் கொல்லப்பட்ட தமிழர்


சிங்கப்பூர் நாட்டில், ஒரு வணிக வளாகத்தில் இருந்து தமிழர் ஒருவரை கீழே தள்ளிவிட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஆர்ச்சர்டு சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், தேவேந்திரன் சண்முகம்(34) என்ற தமிழர் படிக்கட்டில் சென்று கொண்டிருந்தார்.

படிக்கட்டில் ஏற்பட்ட தகராறு

வெளிநாடொன்றில் வணிக வளாகத்தில் கொல்லப்பட்ட தமிழர் | Singapore Tamil Man Pushed Down And Killed


அப்போது, முகமது அஸ்பரி அப்துல் கஹா (27) என்ற நபருடன் சண்முகத்திற்கு தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.






இதில், ஆத்திரமடைந்த முகமது, தேவேந்திரன் சண்முகத்தை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படும் நிலையில், சண்முகம் படிக்கட்டியில் இருந்து கிழே விழுந்து, தலையில் அடிபட்டு, இரத்தவெள்ளத்தில் கிடந்தார்.







அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் சண்முகம் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், முகமது அஸ்பரிக்கு 10 ஆண்டுகள் தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *