Vijay - Favicon

மூழ்கி கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பலை மீட்டது சிங்கப்பூர் கடற்படை


சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.


படகிலிருந்த இலங்கைப் பிரஜையொருவர் சிறிலங்கா கடற்படையை தொடர்பு கொண்டதாகவும், தாங்கள் ஆபத்திலிருப்பதாகவும் கூறியதாகத் தெரிவித்ததாக கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்

கோரப்பட்டது உதவி

மூழ்கி கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பலை மீட்டது சிங்கப்பூர் கடற்படை | Singapore Navy Rescues Sri Lankan Refugee Ship

இந்நிலையில், கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸிடமிருந்து உதவியைக் கோரியிருந்தது.

அந்தவகையில், படகிலிருந்தவர்கள் மீட்கப்பட்டதாகவும், வியட்நாம் நோக்கிச் செல்வதாகவும் இலங்கைக்கு சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 வியட்நாம் நோக்கி செல்லும் கப்பல்

மூழ்கி கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பலை மீட்டது சிங்கப்பூர் கடற்படை | Singapore Navy Rescues Sri Lankan Refugee Ship



இந்நிலையில், படகிலிருந்த இலங்கையரொருவரின் பிரசன்னத்தை மாத்திரமே உத்தியோகபூர்வமாக கடற்படை அறிந்துள்ளதாகத் தெரிவித்த டி சில்வா, ஏனையோரின் அடையாளங்கள், அவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் உறுதிப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *